'ஒழித்திடுவோம்' - கரோனா விழிப்புணர்வு ஓவியம்
நாமக்கல் மாவட்டம் திருச்சி-பரமத்தி சாலையில் 'ஒழித்திடுவோம்' என்ற தலைப்பில் பிரமாண்ட கரோனா ஓவியத்தை வரைந்து தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில், ‘தனித்திருப்போம்! விழித்திருப்போம்! வீட்டிலேயே இருப்போம்!’ போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.