ப. சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கரோனா விழிப்புணர்வு - சிவகங்கை மாவட்டச் செய்திகள்
முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 76ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் கரோனா விழிப்புணர்வு சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. 18கி.மீ தூரம் கொண்ட போட்டியில் முதல் பரிசு 10,076 ரூபாயும், 12 கி.மீ தூரம் கொண்ட பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் முதல் பரிசு 7,076 ரூபாயும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் கோவை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.