அனிமேஷனில் கரோனா விழிப்புணர்வு வீடியோ - அரசு வெளியீடு - தமிழ்நாடு அரசு வெளியிட்ட கரோனா விழிப்புணர்வு தொடர்பான அனிமேஷன் வீடியோ
கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் அதிதீவிரமாகப் பரவிவருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமூகப் பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. குறும்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் மக்களுக்கு கரோனாவை எதிர்கொள்ள தேவையான அறிவுரைகளை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது அனிமேஷன் வீடியோ ஒன்றை தயாரித்து அரசு வெளியிட்டுள்ளது.