கரோனா விழிப்புணர்வு: ஆணி முள் படுக்கையில் படுத்து முன்னாள் ராணுவ வீரர் யோகாசனம் - திருவண்ணாமலை நேரு யுவகேந்திரா
திருவண்ணாமலை: கரோனா தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திருவண்ணாமலை நேரு யுவகேந்திரா சார்பில் முன்னாள் ராணுவ வீரர் சுரேஷ்பாபு என்பவர், 2555 ஆணிகள் கொண்ட முள் படுக்கையில் படுத்து யோகாசனம் செய்தார். மேலும், சிறுவன் ஒருவனை பத்மாசன நிலையில் அவரது வயிற்றின் மீது அமர வைத்து யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.