குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்! - நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆறு மாதங்களாக சுற்றுலா மையங்கள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டன. தற்போது நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.