சுற்றுலா தலத்திற்கு கூட்டமாக வந்த காட்டெருமைகள்! - coonoor byson problem
நீலகிரி: குன்னூரின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் சிம்ஸ் பூங்காவில் அதிகாலை நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக வந்ததால் அப்பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். மேலும், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதிகளில் இருந்த காட்டெருமை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.