குன்னூரில் மண் சரிவால் விபத்து ஏற்படும் அபாயம் - நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு மற்றும் தடுப்புச் சுவரும் இடிந்தும் உள்ளது. குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட குறுகான இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. கனமழை தொடரும் பட்சத்தில் பாறைகள் உருண்டு வாகனங்கள் மீது விழும் அபாயம் உள்ளது, பணியை துரிதப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.