கேஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் - கண்டன ஊர்வலம்
வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.