உதயநிதி ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முண்டியடித்த கல்லூரி மாணவிகள்! - DMK stalin
மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பயணம் மேற்கொள்வதன் ஒரு பகுதியாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு நேற்று வருகை தந்தார். தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்லூரி மாணவிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். தொடர்ந்து மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக அவர்கள் மத்தியில் சென்ற உதயநிதியை சூழ்ந்த மாணவிகள் செல்பி எடுக்க முண்டியடித்தனர்.