கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: விசாரணை தீவிரம் - கோவை பள்ளி மாணவி
கோயம்புத்தூரில் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் நல ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகிய அலுவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று (நவ.18) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், உடன் பயின்ற மாணவ மாணவிகள், பள்ளி நிர்வாகிகள், காவல் துறையினர் ஆகியோரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.