வைரல் வீடியோ: மேடையில் சினிமா பாடல் பாடிய ஐஜி சுதாகர் - வளையோசை கலகலவென
கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநகர காவல் துறை சார்பில் நடந்த "பாரா - கானா" நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், மாவட்ட ஆட்சியர் சமீரன், துணை ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட பல உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காவலர்கள் நடத்திய இசைக் கச்சேரியில், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் திடீரென மேடையில் ஏறி, நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த சத்யா திரைப்படத்தில் வரும் பிரபல பாடலான "வளையோசை கலகலவென" என்ற பாடலை பாடி அசத்தினார்.