தென்னை மரங்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் - elephant
கோவை: பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடையைச் சேர்ந்த கனிமொழி என்பவரது தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை ஒன்று சுமார் 10 தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தை காட்டியும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.