மஞ்சள் தமிழர் தோனி: 'தல'யைப் புகழ்ந்த 'தளபதி' - தோனி
சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 'தமிழர்கள் என்றால் பச்சை தமிழர்கள் என்பது போல், தோனி ஒரு மஞ்சள் தமிழர். தமிழர்கள் அனைவருக்கும் பிடித்ததுபோல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் தோனியைப் பிடிக்கும்' என்றார்.