ஜூன் முதல் வாரத்தில் கரோனா உச்சத்தை தொடும் - மு.க ஸ்டாலின் - CM STALIN Speech at secretary office
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், "இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.