கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு! - மழை வெள்ள பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (நவ.13) முதல் அதிகன மழை பொழிந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.