வாக்குச்சாவடியில் பாமக - அதிமுகவினரிடையே மோதல்; காவல்துறை தடியடி!
காஞ்சிபுரம் அருகே உள்ள சந்தைவேலூர் வாக்குச்சாவடியில் நடைபெற்ற இரண்டாம்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது பாமக , அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குச்சாவடிக்கு பூட்டு போட்ட காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.