சென்னை-திருப்பதி பிரதான சாலையில் பெருக்கெடுத்தோடும் மழைநீர்
சென்னை - திருப்பதி பிரதான சாலையில் புதூர் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவருகின்றன. மேம்பாலப் பணிகள் நடைபெற்றுவருவதால் இந்தத் தரைப்பாலம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால், தற்போது கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் உயிரைப் பணயம்வைத்து வாகன ஓட்டிகள் சென்றுவருகின்றனர். இதனால், ஆறு ஆண்டுகளாக கட்டி முடிக்காத மேம்பாலத்தை உடனடியாகக் கட்டி முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், கிராம மக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.