மருத்துவமனையில் இருந்து ரப்பர் படகு மூலம் கைக்குழந்தை மீட்பு - கைக்குழந்தை மீட்பு
சென்னை புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தை உட்பட ஐந்து நோயாளிகளை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர். புளியந்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றி மழை நீர் தேங்கியதால் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் கைக்குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உதவி வேண்டி தீயணைப்பு துறையினரை தொடர்பு கொண்டார். இதனையடுத்து கைக்குழந்தையுடன் இருந்த பெண், மூதாட்டி உள்ளிட்ட 5 பேரை ரப்பர் படகுகள் மூலம் தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.