2 நாள்களாகத் தொடரும் கனமழை: வெள்ள நீரால் முடங்கிய முடிச்சூர் - வெள்ளநீரால் முடங்கிய முடிச்சூர்
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து அப்பகுதி மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.