தனிமைப்படுத்திக் கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? - சென்னை மாநகராட்சி வெளியிட்ட காணொலி
தமிழ்நாட்டில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும் அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தனிமைப்படுத்துதல் பற்றி பொது மருத்துவத் துறை பேராசிரியருடன், சென்னை மாநகராட்சி இணைந்து விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது.