திருவள்ளூரில் காலம் தவறி பெய்த திடீர் கனமழை: வீணான நெற்கதிர்கள் - திருவள்ளூர் மாவட்டத்தில் காலம் தவறி பெய்த தீடீர் கனமழையால் நிலத்திலேயே மடிந்து வீணாகிபோன சம்பா சாகுபடி நெற்கதிர்கள்
திருவள்ளுர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கீழ் உள்ள ஒன்பது கிராமங்களில் பொங்கல் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 200 ஏக்கர் நெற்கதிர்கள் விலை நிலங்களில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. காலம் தவறி பெய்த திடீர் கனமழையால் வயல்வெளிகளில் தேங்கிய நீரை வடிக்க முடியாத காரணத்தால், நெற்பயிர்கள் விவசாய நிலத்திலேயே நாசமானதாக விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.