பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நெல்.ஜெயராமன் மையம் - ஓ.பன்னீர்செல்வம்
பாரம்பரிய விதை நெல்களை காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்த விவசாயி நெல்.ஜெயராமனை கௌரவிக்கும் வகையில், பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நெல்.ஜெயராமன் மையம் 47.87 லட்சம் ரூபாய் செலவில் நீடாமங்கலத்தில் அமைக்கப்படுகிறது என்று இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.