மயிலாடுதுறையில் குதிரையில் அமர்ந்து நூதன முறையில் வேட்பு மனுத்தாக்கல்! - தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
மயிலாடுதுறை நகராட்சியின் 9ஆவது வார்டில் போட்டியிட, சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது தனது வார்டு குறைகளை பேப்பரில் எழுதி கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு, குதிரையில் அமர்ந்து வந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.