இடைத்தேர்தல்: வெற்றியை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிய அதிமுக தொண்டர்கள்! - தமிழ்நாடு இடைத்தேர்தல் அதிமுக முன்னிலை
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளதால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளனர். மேலும், அதிமுக தொண்டர்கள் மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.