சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து - பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு - கனமழையால் பல்வேறு சாலைகள் வெள்ளம்
சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு சாலைகள் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதில் வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதையில், தேங்கியிருந்த மழை நீரில் இன்று (நவ. 27) காலை மாநகர பேருந்து சிக்கிக்கொண்டது. இதனைப் போக்குவரத்து மற்றும் தீயணைப்புதுறையினர், மற்றொரு வாகனத்தின் உதவியுடன் பேருந்தை கட்டியிழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.