பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு பிரியாணி பார்சல்... படையெடுத்த மக்கள்! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்: சிறுமலைப் பிரிவில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணிக் கடையில், பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு ஒரு பார்சல் ஆம்பூர் பிரியாணி வழங்கப்படும் என உணவக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் உணவகத்திற்கு பழைய ஒரு ரூபாய் நோட்டுடன் படையெடுத்துச் சென்று பிரியாணி வாங்கிச் சென்றனர்.