கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்: தகர்ந்தது தரைப்பாலம்! - தரைப்பாலம் உடைப்பு
திருவள்ளூர்: திருத்தணி அருகிலுள்ள என்.என். கண்டிகை பகுதி வழியாகச் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர மாநிலத்திலிருந்தும், தமிழ்நாட்டில் பெய்யும் மழைநீரிலிருந்தும் அதிகளவு நீர் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் இன்று (நவ. 13) இந்தப் பகுதியிலுள்ள தரைப்பாலம் முற்றிலும் தகர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்கு மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.