சத்தியமங்கலத்தில் மலர்ந்து குலுங்கும் பிரம்ம கமலம் பூ - erode district news
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த கோபால் என்பவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடி வளர்த்து வந்துள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே மலரும் இந்த பிரம்ம கமலம் பூ, தற்போது மலர்ந்து பூத்துக் குலுங்குகிறது. இந்த மலரானது அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே வாடிவிடும் தன்மை கொண்டது. இமயமலையில் பூக்கும் இந்த அபூர்வ வகை பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கி செல்கின்றனர்.
Last Updated : Sep 26, 2021, 8:10 PM IST