காவிரியில் சிறுவர்கள் உற்சாகக் குளியல் - காவிரி உபரிநீர்
கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் மயிலாடுதுறையை வந்தடைந்த நிலையில், அங்குள்ள துலாக்கட்ட பகுதியில் காவிரி புஷ்கர தொட்டியில் உள்ள கிணறுகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஓடியது. ஆற்றில் தண்ணீர் வருவதால் உற்சாகம் அடைந்துள்ள சிறுவர்கள் கும்பல், கும்பலாக வந்து உற்சாகக் குளியலிட்டனர்.