கரையில் தத்தளித்த ராட்சத ஆமையைக் கடலிடம் சேர்த்த சிறுவர்கள்! - கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி: நித்திரவிளை அருகே சின்னத் துறை மீனவ கிராமத்தில் சுமார் 200 கிலோ மதிக்கத்தக்க ராட்சத ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த ஆமை கடல் பரப்பிலிருந்து அதிக தூரம் தள்ளி கரைப் பகுதியில் வந்ததால் திரும்ப கடலுக்குள் செல்ல முடியாமல் மணலில் புதைந்த நிலையில் தத்தளித்தது. பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் உதவியுடன் ஆமையைக் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து பலமணி நேரப் போராட்டத்திற்குப் பின் ஆமை பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டது.