யாஸ் புயல் தாக்கம்: சூறைக்காற்றில் படகுகள் சேதம்! - boats damaged due to hurricane
ராமநாதபுரம்: வங்கக்கடலில் உருவாகிய யாஸ் புயல் இன்று(மே.26) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடந்து வருகிறது. இதன் தாக்கம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணரப்பட்டது. இதனால் சுமார் 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதில் ராமேஸ்வரம் பகுதியில் 11 படகுகள் சேதம் அடைந்துள்ளன. அதனை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, முழு சேதம் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் மீன்வளத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.