மாசி மகம் திருவிழா: சின்னமேடு கிராமத்தில் படகுப்போட்டி - boat race for fishermen on masi magam
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னமேடு மீனவ கிராமத்தில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. மாசி மக திருவிழாவை முன்னிட்டு இங்கு படகுப் போட்டி நடைபெற்றது. உள்ளூர் மீனவர்களுக்காக நடைபெற்ற மூன்றாம் ஆண்டு படகுப் போட்டியில் 20 படகுகளில் 60 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். கடற்கரையிலிருந்து தொடங்கி ஒரு நாட்டிக்கல் தூரம் போட்டி நடைபெற்றது.