மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்: ஆர்வமுடன் ரத்தானம் செய்த இளைஞர்கள் - மாட்டு பொங்கல்
கரூர்: கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரவணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 40 பேர் கலந்து கொண்டு 30 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இதனை வரவணை பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி முன்னின்று வழி நடத்தினார். இதில் இளைஞர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து இரத்த தானம் செய்தனர். இந்த ரத்தத்தை கரூர் தன்னார்வ ரத்த வங்கி பெற்றுக்கொண்டது.