சேலத்தில் வாயில் கறுப்புத் துணி கட்டி பாஜகவினர் போராட்டம்! - சேலத்தில் கறுப்பு துணி கட்டி போராடிய பாஜகவினர்
சேலத்தில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்வதாக திமுக அரசை கண்டித்து, பாஜகவினர் வாயில் கறுப்புத் துணி கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பாஜக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.