சேலத்தில் பாஜக மகளிர் அணியின் பொங்கல் விழா கொண்டாட்டம்! - bjp Pongal festival
பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா என்ற தலைப்பில் சேலம் மூன்று ரோடு பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில், அக்கட்சியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் கோலப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.