நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆட்டோ ஓட்டுனர் மகள் - பாஜகவினர் பாராட்டு - பாஜக
மயிலாடுதுறை: கூறைநாடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஹீரா சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடினமாக படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹீரா நீட் தேர்வு எழுதி 109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவரை பாஜக நகர தலைவர் மோடி.கண்ணன் அலுவலகத்திற்கு அழைத்து சால்வை அணிவித்துப் பாராட்டினார். மேலும் மாணவிக்கு தேவையான உதவிகளை செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளார்.