பாஜக கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு- ஆத்தூரில் பதற்றம்
ஆத்தூர் பழைய பேட்டையில் அடையாளம் தெரியாத நபர்கள் பாஜக கொடி கம்பத்தை வெட்டிச் சாய்த்து சேதப்படுத்திய விவகாரம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில், பாஜகவினர் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.