பொங்கல் பரிசு: பாஜக அண்ணாமலை vs அமைச்சர் சி.வி. சண்முகம் - பாஜக அண்ணாமலை
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு 2000ஆயிரம் ரூபாயாக கொடுப்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் எனப் பேசியிருந்தார். இதுகுறித்து இன்று விழுப்புரத்தில், அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, " விவசாயிகளுக்கு மோடி 6 ஆயிரம் ரூபாயை எதிலிருந்து கொடுத்தார் எனக் கேள்வி எழுப்பினார். மோடி கொள்ளையடித்த பணத்தில்தான் விவசாயிகளுக்கு 6ஆயிரம் ரூபாயை கொடுத்தாரா? என்பதைத்தான் அமைச்சர் மறைபொருளாய் கூறியிருக்கிறார் என்கின்றனர் பலர்.