கரூரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி!
கரூரில் 32ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். 200க்கும் மேற்பட்ட பெண்கள், மகளிர் காவலர்கள் தலைகவசத்துடன் இருசக்கர வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.