சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனத்தால் பரபரப்பு! - kanchipuram district news
காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வாகனம் சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் சாத்தான் குட்டை தெருவின் வழியாக செல்லும்போது வாகனத்தில் இருக்கை பகுதியிலிருந்து புகை வரவே, வாகனத்தை நிறுத்தி பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் தீப்பற்றி எரியவே செய்வதறியாது ஒதுங்கி நின்றார். இருசக்கர வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால், அந்நபர் காவல் நிலையத்தில் புகாரும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.