கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள கரடிகள் : அச்சத்தில் பொதுமக்கள் - கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள கரடிகள் பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஆடந்தோரை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் நடுவே கரடி குழி தோண்டி இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. இதன் காரணமாக தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவ்வழியாக செல்ல அஞ்சுகின்றனர். கரடு குட்டிகளை பாதுகாப்பதுடன், அப்பகுதிக்கு பணிக்கு செல்ல வேண்டாம் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வனத்துறையினர் எச்சரிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.