கும்பக்கரை அருவியில் குளிக்க 51ஆவது நாளாக தொடரும் தடை! - தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க 51நாளாகத் தடை
தேனி: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மலைப் பகுதியிலிருந்து தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.தொடர்ந்து 51ஆவது நாளாக நீடிக்கும் இந்தத் தடையால் அருவிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.