கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஓவியம்: குவியும் பாராட்டுகள் - thiruvallur news
திருவள்ளூர்: தமிழ்நாடு ஓவியர்கள் சங்க மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் எல் சி நாராயணன் தலைமையில், 20 ஓவியர்கள் இணைந்து கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து ஓவியங்களை ஆயில் மில், காமராஜர் சாலை ஆகிய சந்திப்புகளில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு ஓவியங்களைப் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.