"பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்" பள்ளி மாணவிகள் பேரணி!! - School students rally for plastic ban
சேலத்தில் ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பேரணியாகச் சென்று பிளாஸ்டிக் ஒழிக்கப்பட வேண்டும் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். சின்னதம்பி, ஆத்தூர் நகராட்சி ஆணையர் சரஸ்வதி, அதிமுக நகரச் செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் பேரணியில் பங்கேற்றனர்.