பக்தர்களிடம் இருந்து விடைபெற்ற அத்திவரதர் - athivarathar
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலிலுள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஜூலை 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து தரிசித்தனர். இந்நிலையில் 48ஆவது நாளான நேற்று (ஆக்.17) அத்திவரதரை குளத்திற்குள் வைக்கும் வைபவம் நடைபெற்றது.