அரியலூர் மகாமிளகாய் சண்டி யாகம்! - அரியலூர் மஹா சண்டி யாகம்
அரியலூர் அருகே பொய்யாதநல்லூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு மகாமிளகாய் சண்டி யாகம் நடத்தப்பட்டது. யாகத்தில் மிளகாய் எவ்வளவு கொட்டினாலும் எந்த நெடியும் ஏற்படாது என நம்புகின்றனர், அப்பகுதி மக்கள். மேலும் யாகத்தில் புடவைகள், நவதானியங்கள், உலர் திராட்சைகள், முந்திரி மற்றும் பல்வேறு பழ வகைகள் கொட்டப்படுவதும் வழக்கம். யாகத்திற்குப்பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.