'எதுல செஞ்சாங்கலோ...' - திறக்காத பணப்பெட்டியால் ஏமாற்றத்துடன் திரும்பிய கொள்ளையர்கள்! - Robbers who broke ATM machine
அரியலூர்: திருமானூர் - தஞ்சை சாலையில் இந்தியன் வங்கி வெளிப்புறத்தில் அதே வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால், பணப்பெட்டி திறக்காததால் ஏமாற்றத்துடன் கொள்ளையர்கள் திரும்பிச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.