அரக்கோணம் கொலை சம்பவம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ - ranipettai district news
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த குழுவினருக்கிடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற மோதலில் அர்சுனன் (26), சூர்யா(26) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் மதன், வல்லரசு, சௌந்தர்ராஜ் ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.