Sunday Curfew: வெறிச்சோடி காணப்பட்ட கருவாட்டு சந்தை! - கருவாட்டு சந்தை
மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் கருவாடுகள் விற்பனை செய்யப்படும். இவற்றை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் சென்று சிறுவிற்பனையில் ஈடுபடுவர். கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சித்தர்காடு கருவாட்டு சந்தை மூடப்பட்டது. சந்தையில் உள்ள சொற்ப ஊழியர்கள் கருவாடுகளை காயவைத்தல், பராமரிப்பு பணி போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.