Thiruchendur temple anarchy: திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடரும் உதவி ஆணையரின் அராஜகம்! - assistant commisioner misbehave at thiruchendur temple
திருச்செந்தூர் (தூத்துக்குடி): முருகன் கோயிலில் தரிசனம் செய்யும்போது, இலவச தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரமாக அனுமதிக்கப்படாமல் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஆலய நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால், அங்கு வந்த உதவி ஆணையர் பக்தர்களுக்கு உரிய பதில் அளிக்காமல், அங்கு அந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த பக்தரின் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கைபேசியை கீழே தள்ளி உடைத்தது மட்டுமல்லாமல் பக்தர்களை தாக்கியுள்ளார். இதனால் பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். சம்பந்தப்பட்ட அந்த உதவி ஆணையர் மீது இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்.